அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேத மருத்துவத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேத மருத்துவத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேத மருத்துவத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என்று பட்டியலிட்டு இந்த சிகிச்சைகளை செய்ய ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்துள்ள சூழ்நிலையில் எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் சிகிச்சைக்கு பிறகு கொடுக்க வேண்டிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாகவே அமையும் எனவும் உடனடியாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இந்திய மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்காவிட்டால் வரும் 11ம் தேதி 24 மணிநேர மருத்துவ பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...