கோவை: கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.

இதில், கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சிப் பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில்நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில், சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர்.
அவர்களது தொழில் நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.
விவசாயிகளின் பாரத் பந்திற்கு கோவையில் 60 சதவீத தொழில்முனைவோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் மாவட்டம் தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: சிறு, குறுந்தொழில்முனைவோர்கள் பெரும்பாலானோர் விவசாயிகளுக்க ஆதரவு தெரிவித்து இன்று விடுமுறை அறிவித்துள்ளார்கள். சுமார் 50 சதவீத நிறுவனங்கள் இயங்கவில்லை,.இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.
கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறியதாவது: விவசாயிகளை நம்பிதான் நாங்கள் உள்ளோம். எங்கள் சங்கத்தின் கீழ் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக என்றுமே களத்தில் இருப்போம். இவ்வாறு மணிராஜ் கூறினார்.