கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் காவல் துறையினர் இடையே தள்ளு முள்ளு

கோவை: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 13 நாட்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினரும், பொது அமைப்புகளும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


கோவை: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 13 நாட்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினரும், பொது அமைப்புகளும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசை கண்டித்தும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வந்தனர்.



இதனையடுத்து, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...