கோவை: கோவையில் வழிப்பறி கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரையும் மூன்று நாட்கள், போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24), இவர் கோவை பீளமேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வநதார். இவர் கடந்த மாதம் 29-ம் தேதி இரவு கோவை விமான நிலையம் அருகே எஸ்.ஐ.எச். எஸ் காலனி பகுதியில் தனது நண்பரான வால்பாறையை சேர்ந்த சுஜித் (30), என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட வழிப்பறி கொள்ளை கும்பல் வழிமறித்து செல்போன் கேட்டு மிரட்டினர்.
சுஜித் உயிருக்கு பயந்து செல்போனை கொடுத்து விட்டார். ஆனால், செல்போனை கொடுக்க மறுத்ததால் கொள்ளையர்கள் விக்னேசை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக சிங்காநல்லூர் மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் (22), தட்சன் தோட்டம் தெற்கு வீதியை சேர்ந்த அபிவிஷ்ணு (22) ஆகிய 2 பேர் கடந்த 1ம் தேதி கோவை மாஜிஸ்திரேட் இரண்டாவது கோட்டில் சரணடைந்தனர். பின்னர், அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், அவர்களை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணை, நேற்று மாலை நடைபெற்றது. கைதான ரெண்டு பேரையும் 10-ஆம் தேதி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டார்.