கோவை: கோவையில் மருத்துவமனை வாடகை பிரச்சினை தொடர்பான மோதலில், ஈடுபட்ட டாக்டர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை 100 அடி ரோடு, சத்தி சாலை சந்திப்பில் எல்லன் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், 2017-ம் ஆண்டில் இருந்து சென்னையை சேர்ந்த டாக்டர் உமா சங்கர் என்பவர் அந்த மருத்துவமனையை குத்தகைக்கு எடுத்து, அதனை புதுப்பித்து நடத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த மருத்துவமனையின் பெயர் சென்னை மருத்துவமனை என்று மாற்றப்பட்டது.
இந்த நிலையில், டாக்டர் உமா சங்கருக்கு மருத்துவமனை கட்டிட உரிமையாளருக்கும் இடையே வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 20 பேர் கொண்ட ஒரு கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்து சென்னை மருத்துவமனை என்ற பெயர்ப்பலகையை சேதப்படுத்தி அதை எடுத்து வீசிவிட்டு, பின்னர்,அதில் எல்லன் மருத்துவமனை என்ற பேனரை கட்டிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்த நோயாளிகளிடம் அறையை காலி செய்யுமாறு கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எல்லன் மருத்துவமனை சேர்மன் ராமச்சந்திரன், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், டாக்டர் உமா சங்கர், இந்த மருத்துவமனையை 10 ஆண்டுகள் வாடகை அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்ததாகவும், ரூபாய் 4 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் வரை வாடகை பாக்கி வைத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தெரிவித்துள்ளார்.
மேலும், 100 கோடி மதிப்புள்ள இந்த மருத்துவமனையை, டாக்டர் உமா சங்கர் வேறு நபருக்கு கைமாற்ற திட்டம் தீட்டி நடவடிக்கை எடுத்துள்ளார், என்று குற்றம் சாட்டினார். மேலும், வாடகை பாக்கி சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், இது முறையீடு செய்தால், சென்னை மருத்துவமனையின், மேலாளர் மருதவாணன் உடன் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார். எனவே, தனது மருத்துவமனையை அபகரிக்க தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.
அவரது புகாரின் பேரில், நகர குற்றப்பிரிவு துணை ஆணையர், சௌந்தரராஜன் விசாரணை செய்து, மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் சென்னை மருத்துவமனை சேர்மன், டாக்டர் உமா சங்கர், மேலாளர் மருதவாணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.