திருப்பூர்: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூரில் 90 சதவீத கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 10,000க்கும் மேற்பட்ட சிறு, குறு ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 13 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய, சூழ்நிலையில் 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என இன்றைய தினம் நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதற்கு தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்த சூழ்நிலையில், இன்று திருப்பூரில் பேக்கரி, உணவகங்கள், ஜவுளி கடைகள், இதர கடைகள் உள்ளிட்ட 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும், பின்னலாடைநகரான திருப்பூரில் 70 சதவீத அளவிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு ஏற்றுமதி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஆகியவையும் ஓடவில்லை.

இதனால், திருப்பூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெரிய கடைவீதி, புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.