உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க திருமூர்த்தி அணை விவசாயிகள் ஆட்சேபனை...!

கோவை: திருமூர்த்தி அணையிலிருந்து தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் திருமூர்த்தி அணை விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.


கோவை: திருமூர்த்தி அணையிலிருந்து தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் திருமூர்த்தி அணை விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.



பரப்பிக்குளம் - ஆழியாறு திட்ட அலுவலகத்தில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் ஜெ. கோபி, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், தாராபுரம் டிஎஸ்பி ஜெயராமன், வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, கூடத்தில் பேசிய திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், கடந்த சில ஆண்டுகளாக மழை பொழிவு குறைந்து கொண்டே வருவதால், திருமூர்த்தி அணையில் உள்ள பாசன நிலங்களுக்கே முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிஏபி திட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத உப்பாறு அணைக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்க கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மேலும் பேசுகையில், திருமூர்த்தி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து, வெள்ளக் காலங்களில் திருமூர்த்தி அணையிலிருந்து, உபரிநீர் வெளியேற்றப்படும் போது மட்டுமே, உப்பாறு அணைக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியும். தற்போது, அதுபோன்ற சூழல் இல்லாததால், திருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக் கூடாது, என்றார்.

பின்னர் பேசிய, பிஏபி திட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, திருமூர்த்தி அணையில் 2 –வது மண்டலத்துக்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீர் அளவு, 3 வது மண்டலத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் அளவு, தற்போது அணையின் நீர் இருப்பு, கேரளாவுக்கு வழங்க வேண்டிய நீர் அளவு, ஆழியாறு படுகைக்கு வழங்க வேண்டிய தண்ணீர் அளவு ஆகியவை கணக்கிடப்பட்டதில், தற்போது 3 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை, என்பதால் திருமூர்த்தி அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பவில்லை. எனவே, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்குவதற்கு சாத்தியகூறு இல்லை, என்றார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...