கோவையில் அம்ருத்‌ திட்டத்தின்கீழ்‌ குடிநீர் திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் சுப்பிரமணியம்பாளையம்‌ மற்றும்‌ வெள்ளக்கிணறு பகுதிகளில்‌ அம்ருத்‌ திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் சுப்பிரமணியம்பாளையம்‌ மற்றும்‌ வெள்ளக்கிணறு பகுதிகளில்‌ அம்ருத்‌ திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பில்லூர்‌ நீராதாரம் மூலம்‌ கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படும்‌ மொத்த குடிநீரின்‌ அளவு போதுமானதாக இருந்த போதிலும்‌ புதிதாக இணைக்கப்பட்ட துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும்‌ காளப்பட்டி ஆகிய 6 பகுதிகளில்‌ தற்போதைய குடிநீர் விநியோக அளவு நபர்‌ ஒருவருக்கு நாளொன்றுக்கு 70 லிட்டர்‌ என்ற விகிதத்தில்‌ 6 நாள்‌ முதல்‌ 8 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான கூடுதல்‌ குடிநீர் விநியோகிக்க உள்கட்டமைப்பு அமைத்து தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு சீரான குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்படவுள்ளது.

மேலும்‌, புதிதாக வீட்டு இணைப்புகள்‌ குடியிருப்புகளுக்கும்‌, வணிக நிறுவனங்களுக்கும்‌ அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள்‌ நடைபெறுவதை துடியலூர் சுப்பிரமணியம் பாளையம்‌ மற்றும்‌ வெள்ளக்கிணறு பகுதிகளில்‌ வீடுகளுக்கு பில்லூர்‌ குடிநீர்‌ இணைப்பு வழங்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளா்‌ அவர்கள்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்தார்.

மேலும், குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில்‌ பைப்புகள்‌ ஏதேனும்‌ பழுதடைந்திருந்தால்‌ உடனடியாக சரிசெய்து குடிநீர் வெளியேறா வண்ணம்‌ மற்றும்‌ கசிவு ஏற்படா வண்ணம்‌ குழிகளை மூடப்பட வேண்டும்‌ என தெரிவித்தார்.

தொடர்ந்து, தடாகம்‌ ரோடு, பெரியசாமி சாலை, வெங்கிடசாமி சாலை, டி.பி.ரோடு, பொன்னுரங்கம்‌ ரோடு, திருவேங்கடசாமி சாலை ஆகிய பகுதிகளில்‌ 24 மணி நேரம் குடிநீர் வழங்க மீட்டர் இணைப்பு பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளர்‌ அவர்கள்‌ குடிநீர் விநியோகத்திற்காக முடிக்கப்பட்ட இடங்களில்‌ உடனடியாக தார்சாலை அமைக்க தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாய்வின்போது, செயற்பொறியாளர்‌ (24X7 குடிநீர் திட்டம்‌) பார்வதி, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய நிர்வாக பொறியாளர்‌ விவேகானந்தம்‌, உதவி நிர்வாக பொறியாளர்‌ தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரியம்‌ விஜியலட்சுமி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...