கோவை: கோவை சூலூர் அருகே முகவரி கேட்பது போல் இளம்பெண்ணிடம் 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மூன்று வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி செந்தூர் நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மனைவி கௌசல்யா(30) சம்பவத்தன்று குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்குச் சென்றார்.
பின்னர், பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கௌசல்யாவின் அருகில் வந்து ஒரு விசிட்டிங் கார்டை காட்டி முகவரி கேட்டனர். அந்தப் பெண்ணும் உதவி செய்யும் நோக்கோடு மிகவும் ஆர்வமாக முகவரியை வாசித்துக் கொண்டிருந்தார்.
இதனிடையே, அந்த நேரத்தில் வாலிபர்கள் கௌசல்யா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் செயினை பிடித்தபடி போராடினார். அப்போது அந்த வாலிபர்கள் அரிவாளைக் காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர், இதுகுறித்து கௌசல்யா சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 379 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல் நடித்து இளம்பெண்ணை மிரட்டி செயினை பறித்து 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.