கோவை: அவினாசி அருகே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி சேவூர் அருகே உள்ள வடுகபாளையம் காரைக்குட்டை புதூர் மேற்கால தோட்டத்தைச் சேர்ந்தவர் சாமியப்பன். இவருடைய மகள் கிருத்திகா (19), இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை சாமியப்பன் வெளியில் பால் கொண்டு சென்றார். இதனால் கிருத்திகாவும் அவருடைய தாயாரும் வீட்டில் இருந்தனர். பின்னர் கிருத்திகா மட்டும் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
அதைத்தொடர்ந்து, தாயாரை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்புறத்தில் தாழிட்டுவிட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 80 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது.
பின்னர், இதுகுறித்து உடனடியாக அவிநாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மாணவி கிருத்திகா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் 174 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதற்கான காரணங்கள் என்னவென்று போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.