கோவையில் தகாத உறவை தட்டி கேட்ட உறவினர் வெட்டி கொலை..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் தகாத உறவை தட்டி கேட்ட உறவினர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் தகாத உறவை தட்டி கேட்ட உறவினர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணகுமார் (36). கிருஷ்ண குமாருக்கு ஹோமோசெக்ஸ் பழக்கம் இருந்து வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலக்கல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் அவர் மற்றொரு நபருடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர் கண்டித்ததுடன் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.

இதையறிந்த கிருஷ்ணகுமாரின் நெருங்கிய உறவினரான நந்தகுமார் (20), என்பவர் அவரைக் கண்டித்தார். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்களை அங்கிருந்தவர்கள் சமரசப்படுத்த அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நந்தகுமாரை தலையில் பலத்த காயத்துடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது விபத்தில் சிக்கி நந்தகுமார் காயமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பலியானார்.



இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். நந்தகுமாரின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்ட போது, அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. அதனால்தான் அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் முரளி, உதவி ஆய்வாளர் ஜெபக்குமார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக நந்தகுமாரை அவரது உறவினர் கிருஷ்ணகுமார் வெட்டி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் ஹோமோசெக்ஸ் உறவில் ஈடுபட்டதை நந்தகுமார் கண்டித்தார். இதனால் அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. எனக்கு திருமணம் முடிக்க பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை சுட்டிக்காட்டி ஹோமோசெக்ஸ் பழக்கத்தில் உள்ள நீ திருமணம் செய்து கொண்டு என்ன செய்யப்போகிறாய் என கேட்டு என்னை ஏளனமாய் பேசினான். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். எங்கள் ஊர் பஸ் நிறுத்தத்தில் தனியாக இருந்த நந்தகுமாரை அரிவாளால் வெட்டிய பின்னர் உறவினர்கள் மூலம் அதனை விபத்து என கூறி நாடகமாட திட்டமிட்டேன். நந்தகுமார் இறந்துவிட்டதால் போலீசார் விசாரித்து என்னை பிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...