கோவை: ஆயுர்வேதம் படித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
கோவை: ஆயுர்வேதம் படித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 19ம் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் ஆயுர்வேதம் படித்த மருத்துவர்கள் 59 பிரச்சனைகளுக்கான அறுவை சிகிச்சையினை செய்யலாம் என்ற உத்தரவை ஒன்றை தெரிவித்துள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மருத்துவர்கள் கூறும்போது, நிதிஆயோக் அமைப்பு, நான்கு குழுக்களை அமைத்து மருத்துவ கல்வி, மற்றும் பொதுமக்களுக்கான சுகாதார முறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி என அனைத்தையும் எல்லா மருத்துவ துறைகளையும் நவீன மருத்துவம் கலந்த ஒரே கலவை முறைகளை கொண்டு வர அமைத்துள்ளது.
இந்த முறை என்பது பொதுமக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் எனவும் அனைத்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சை என்பதை செய்ய முடியாது. இதனால் அலோபதி மருத்துவர்களோ, ஆயுர்வேத மருத்துவர்களோ பாதிக்கப்பட போவதில்லை. பொதுமக்களே அதிகம் பாதிக்கபடுவர் என தெரிவித்தவர்கள், அலோபதி மருத்துவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதிலும் உள்ள அலோபதி மருத்துவர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு என்பது கிளம்பியுள்ள நிலையில், இந்த உத்தரவை இந்திய மருத்துவ கவுன்சில் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகின்ற 11ம் தேதி அனைத்து மருத்துவ இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் முதற்கட்டமாக நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார், அரசு, மருத்துவ மாணவர்கள், பல் மருத்துவர்கள் உள்ளிட்ட 38,000 மருத்துவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தனர்.