வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி திருப்பூரில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் அமைப்பு ஆதரவு!

திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி திருப்பூரில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் அமைப்பு ஆதரவு!


திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி திருப்பூரில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்குபல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, நாளை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் வேர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 11வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் விவசாய சங்கத்தினர் சார்பாக நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாக, நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு வேர்கள் அமைப்பு முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

அதேபோல, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் நாளை நடைபெற உள்ள விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்துள்ளார்.

"ஜவுளித் தொழிலின் மூலதனமே பருத்தி தான் பருத்தி விளைவிப்பது விவசாயிகள் ஆகையால் நாங்கள் இதற்கு ஆதரிக்கிறோம்", என்று அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...