திருப்பூர்: திருப்பூரில் ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பழனிச்சாமி நகர் பகுதியில் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டார்.
உணவு பாதுகாப்புத்துறை விசாரணையில் ராஜேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், முறைகேடு உறுதிப்படுத்தப்பட்ட பின்னும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், போயம்பாளையம் பழனிச்சாமி நகர் ரேஷன் கடையில் 1350 ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், அவற்றை இரண்டு கடைகளாக பிரிக்க வேண்டுமென வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.