வால்பாறையில் தமிழக-கேரள எல்லையில் இரு மாநில வன அலுவலர்கள் கூட்டு ரோந்து பணி!

கோவை: வால்பாறையில் தமிழக-கேரள எல்லையில் இரு மாநில வன அலுவலர்கள் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் தமிழக-கேரள எல்லையில் இரு மாநில வன அலுவலர்கள் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மானாம்பள்ளி வனச்சரகம் கேரள - தமிழக எல்லையில் உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி அவர்களின் உத்தரவின் பேரில் 6-12-20 மற்றும் 7-12-20 ஆகிய இரு நாட்களும் கேரள தமிழக வனத்துறை அதிகாரிகள் இரு மாநில எல்லைகளில் கூட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.

இந்த இரு மாநில கூட்டு ரோந்து பணியில் தமிழகம் சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரக அலுவலர் நவீன்குமார் மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் ஆகிய இருவரும் வழி நடத்தினர்.



கேரள மாநிலம் சார்பாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கருமலை வனச்சரக அலுவலவர் கண்ணன் மற்றும் ஒருகொம்பன் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் கேரள வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டு ரோந்து பணிகளின்போது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் இடைப்பட்ட பரம்பிக்குளம் நீர்பிடிப்பு பகுதிகள், மந்திரி மட்டம், சீட்டுக்கள் மலை, தவிட்டு கோழி மலை, மீன் பாறை, பத்தடி பாலம், கோழிகமுத்தி, வரகளியாறு ஏலக்காய் பாறை போன்ற பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டன.

மேலும், இரு மாநில வனத்துறை அதிகாரிகளும் புலிகள் உட்பட வன விலங்குகளின் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, வனத்தீ மேலாண்மை, அந்நிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்தல், வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளான வேட்டையாடுதல், நில ஆக்கிரமிப்பு, மரம் வெட்டுதல் போன்றவற்றை தடுத்தல் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...