கோவை: கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த சரஸ்வதி தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
கோவை: கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த சரஸ்வதி தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் தனது மகனும், மருமகளும் உயிரிழந்த நிலையில் ஐந்து வயது பேரனுக்கு இடுப்பிற்கு கீழ் செயலிழந்து விட்டதாகவும், வாடகை வீட்டில் வசித்து கொண்டு, பேரனையும் கவனித்து வருவதாக, அம்மனுவில் தெரிவித்தனர்.
மேலும், வயது முதிர்வின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்கள் உள்ளதாகவும், அடிக்கடி பேரன் இயற்கை உபாதைகளை வீட்டுக்குள்ளேயே கழிப்பதால், வீட்டின் உரிமையாளர்கள் காலி செய்யுமாறு நிர்ந்திப்பதாகவும், இதனால், பல்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து விட்டதாக, கவலைப்பட தெரிவித்தனர்.
ஆகையால், தங்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒரு ஒதுக்கி தர வேண்டுமென, ஆட்சியரிடம் மனு அளித்து கேட்டுக்கொண்டனர்.