கோவை: சமீபத்தில், கோவை விமான நிலையத்தில் ரூபாய் 5.5 கோடிக்கும் மேல் மதிப்புள்ள மெத் எனப்படும் அதிக விலை கொண்ட போதை பொருளை, அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட நபரை விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், நாகரத்தினம் என்ற அந்த நபர், தனக்கு இதில் சம்மந்தம் இல்லை என்றும், விமான நிலையம் முன்பு தனது நண்பர்கள் இருவர் கொடுத்த சூட்கேசை தான் எடுத்து வந்ததாக கூறினார்.

இந்த நிலையில், விமான நிலைய முன்பு, சூட்கேசில் போதைப் பொருட்களை, நாகரத்தினத்திடம் மறைத்து வைத்து இருவர் கொடுத்துள்ளது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (44). நேற்று முன்தினம் அதிகாலை, கோவையிலிருந்து - சார்ஜா செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்த இவர் கொண்டு வந்த சூட்கேசை ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தததில், அந்த சூட்கேசின் பின் பகுதியில் சந்தேகத்திற்குரிய இரு பொட்டலங்கள் உள்ளதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தனர்.
அதன் பின்னர், நடத்தப்பட்ட சோதனையில் சூட்கேசில் 5 கோடிக்கு மேல் மதிப்பிலான 1.2 கிலோ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், நாகரத்தினம் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வருவது தெரிந்தது.
தொடர் விசாரணையில், விபத்தில் சிக்கிய மனைவி மற்றும் குழந்தையை பார்க்க திருச்சி வந்த, நாகரத்தினம், கொரோனாவால் மீண்டும் சவுதி செல்ல முடியததால், பலரிடம் உதவி கேட்டு வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அருள், அலிபாய் ஆகிய இருவரும், நாகரதினத்திடம் உதவி செய்வதாக கூறியுள்ளனர்.
பிறகு, நாகரத்தினத்துடன் நேற்று முன்தினம் விமான நிலையம் வந்த அவர்கள், அவரிடம் காலி சூட்கேஸ் ஒன்றை கொடுத்து, சவுதி அரேபியாவில் வந்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சந்தேகம் ஏற்பட்டதால், நாகரத்தினம் சூட்கேசை சோதனை செய்ததில் போதை பொருட்கள் உள்ளது கண்டறியப்பட்டது.
இந்த நிலையத்தில், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவர் நாகரத்தினதிடம் சூட்கேஸ் கொடுத்தது உறுதியானதையடுத்து, அருள், அலி பாய் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.