நீலகிரியில் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறப்பு..! முக கவசம், சமூக இடைவெளியுடன் கண்டு ரசிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கோவை: நீலகிரியில் எட்டு மாதங்களுக்கு பின், இன்று முதல் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. முக கவசம், சமூக இடைவெளியுடன் சுற்றுலா இடங்களுக்கு கண்டு ரசிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை: நீலகிரியில் எட்டு மாதங்களுக்கு பின், இன்று முதல் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. முக கவசம், சமூக இடைவெளியுடன் சுற்றுலா இடங்களுக்கு கண்டு ரசிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், உலக அளவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். ஆண்டுக்கு, 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்ற நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் அனுமதியின்றி அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்ந்த சுமார் 22 ஆயிரம் குடும்பங்கள் கடந்த 9 மாத காலமாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், கோடநாடு காட்சி முனை, பைக்காரா படகு இல்லம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தலங்களும் இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 



சுற்றுலா தலங்கள், திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொட்டபெட்டா காட்சி முனையை இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முறையாக முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி இயற்கை அழகை ரசித்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். 

குறிப்பாக, ஒன்பது மாதம் கழித்து சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, முதுமலை புலிகள் காப்பகம் உட்பட வனத்துறைக்கு சொந்தமான சூழல் சுற்றுலா தலங்கள் இன்னும் திறக்கப்படாதால், நீலகிரிக்கு யானை சவாரி, வனவிலங்குகளை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...