மானிய வரம்பை 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்த்த, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் முதல்வருக்கு கோரிக்கை..!

கோவை: மானிய வரம்பை புதிய வரையறைக்கு ஏற்ப 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க போசியா, வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவை: மானிய வரம்பை புதிய வரையறைக்கு ஏற்ப 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க போசியா, வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் போசியா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: 

குறு மற்றும் சிறு தொழில்கள் இன்னும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. குறும் தொழிற்சாலைகளுக்கு இயந்திர முதலீட்டுத் தொகைக்கு கிரிடிட் லிங்கில் கேபிடல் சப்சிடி (Capital Subsidy) திட்டத்தின் மூலம், தமிழக அரசு 25 சதவீத மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம் 25 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு சிறு குறு நடுத்தர தொழில்களுக்கான வரையறைகளை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளது. 

அதன்படி, குறுந்தொழில்கள் 1 கோடி ரூபாய் வரை இயந்திரம் மற்றும் தளங்களில் முதலீடு செய்யலாம். எனவே, தமிழக அரசு முதலீடு மானிய உச்சவரம்பை புதிய வரையறைக்கு ஏற்ப, தற்போது உள்ள 25 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். இதன் வாயிலாக குறுந்தொழில்கள் பெரிதும் பயன் பெறுவதுடன் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும் வழிவகுக்கும், இவ்வாறு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...