பொள்ளாச்சி: கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டது. அரசு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவித்த போதும், மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகள் திறக்கப்படாமலேயே,வ்ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

தற்போது, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, இன்று பொள்ளாச்சியில் அரசு, பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டது. காலை முதலே, மாணவர்கள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரி நுழைவாயில் முன்பு, மாணவர்களுக்கு சேனிடைசர் மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, வகுப்பறைக்குள் ஒரு நாற்காலி இடைவெளி விட்டு மாணவர்கள் அமர்ந்து பாடங்களை கற்று வருகின்றனர். பொள்ளாச்சியில் பெரும்பாலான மாணவர்கள் கிராம பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வருவதால், கல்லூரி திறக்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், தற்போது போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், கல்லூரிக்கு வருவதில் சிக்கல் உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பொள்ளாச்சியில் இருந்து கிராமபுரங்களுக்கு செல்லும் பேருந்துகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.