கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!

கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அக்கிரகாரம், அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் ரவி (41). இவர், திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு, ரவி பவானி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து, அக்டோபர் 17-ம் தேதி கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 

விசாரணைக் கைதியான ரவி நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது சிறை அறைக்குள் நடந்து கொண்டிருந்தார். சக கைதிகள் இது குறித்து விசாரித்த பொது,  தனக்கு நெஞ்சு எரிச்சல் உள்ளதால் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், ரவி திடீரென சுருண்டு மயங்கி கீழே விழுந்தார். முதலுதவிக்கு பின், ரவி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

கோவை மத்திய சிறையில், விசாரணை கைதி ஒருவர் உடல்நிலக்குறைவால் இறந்ததால், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...