மத்திய, மாநில அரசுகளை எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம்..! கோவை தொழில்துறையினர் வேதனை..!

கோவை: கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.

கோவை: கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன. 

இதில், கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சிப் பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில்நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

கோவையில் சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில்நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக, ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த தொழில்நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி உள்ளன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கு கூட போதுமான நிதி இல்லாத காரணத்தால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைலை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் மாவட்டம் தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: 

கொரோனா ஊரடங்குகிற்கு முன்னரே, தொழில் நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வந்தனர். ஊரடங்கினால் தொழில்நிறுவனங்கள் மேலும் பாதிக்கப்பட்டன. ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்தாலும், தொழில்துறையினரால் மீண்டு வரவே முடியவில்லை. குறிப்பாக, மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கடன் திட்டங்கள் எதுவும் பெரும்பாலான சிறு,குறு தொழில்முனைவோர்களுக்கு கிடைக்க பெறவில்லை. 

கோவை மாவட்ட ஆட்சியர் மூலமாக சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா காலத்தில் சிறப்பு கடன் வழங்க சுமார் 400 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அதில் பெரும்பாலான தொழில்முனைவோர்களுக்கு தற்போது வரை கடன் வழங்கப்படவில்லை. வாடகை கொடுக்கக்கூட வழியில்லாமல் குறுந்தொழில்முனைவோர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். ஏற்கனவே, ஜி.எஸ்.டி வரியால் சிக்கி தவித்து வரும் தொழில்முனைவோர்கள் மீண்டும் இக்கட்டான மிக பெரிய சிக்கல்களில் சிக்கி தவித்து வருகின்றனர். 

பல்வேறு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சிறு, குறு தொழில்முனைவோர்கள் மூலம் ஜாப் ஆர்டர்கள் செய்து தரப்படுகிறது. அவர்கள், 30 நாட்களுக்குள் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். ஆனால், 120 நாட்கள் வரை அவர்கள் எடுத்து கொள்கின்றனர். இதனிடையே, ஜி.எஸ்.டி வரி கட்ட ஒரு நாள் தாமதம் ஆனாலும், கூட அதற்காக அபராதம் வசூல் செய்யப்படுகின்றது. இது போன்ற காரணங்களால், பல்வேறு தொழில்முனைவோர்கள் தங்களது தொழிலை நடத்த முடியாமல் தொழில்நிறுவனங்களை மூடி உள்ளனர். இதனால், பலரும் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர், சிவக்குமார் கூறியதாவது: 

கொரோனா கால சிறப்பு கடனாக ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு, அதன் அடிப்படையில் வங்கிகளில் கடன் அளிக்கப்பட்டது. ஆனால், கடன் வாங்காமல் தொழிலை நடத்தியவர்களுக்கு கடன் பெரும்பாலும் கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொழிலை நடத்துவது என்பது மிகப்பெரிய சவாலக உள்ளது. வங்கிகளில் கடன் கிடைக்காமல் தனியார் கடன் நிறுவனத்தில் குறுந்தொழில்முனைவோர்கள் கடன் பெற்று தொழிலை நடத்தி வருகின்றனர். இதில், இருந்து அவர்கள் மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழில்நிறுவனங்கள் பல்வேறு நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வால் சிறு நிறுவனங்களுக்கு தரப்படும் ஜாப் ஆர்டர்களை குறைத்துள்ளனர்.

6 மாத கால இ.எம்.ஐ.க்கள் ஒத்திவைப்பின் போது, அதன் வட்டிகளையாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்தனர் ஆனால், அந்த வட்டிக்கும் வட்டி வசூல் செய்யப்படுவது மட்டுமே தள்ளுபடியானது. தொழில்துறையினரின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் உதவிகள் செய்தால் மட்டுமே தொழில்துறையினர் மீண்டு வர முடியும். இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறியதாவது: 

கொரோனா ஊரடங்குக்கு பின் மீண்டும் தொழிலை புதிதாக தான் துவங்கியுள்ளோம். கொரோனா கால சிறப்பு கடன்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அதில் ஏற்கனவே கடன் வாங்கிய வரவு செலவு கணக்கு அடிப்படையில் 20 சதவீதம் கடன் வழங்கப்பட்டன. இதில், பெரிய நிறுவனங்கள் பயன்பெற்றன. ஆனால், சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் வங்கிகளில் சொத்து பினை இல்லாமல் தான், இதுவரை கடன் பெற்றிருப்பார்கள். இதன் காரணமாக கொரோனா கால சிறப்பு கடன் பெரும்பாலும் சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை. 

கடன் கிடைத்தவர்களுக்கும் மிகுந்த குறைந்த அளவே, கடன் கிடைத்தது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் போது மூலப்பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக மூலப்பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே தான் வருகிறது. ஜி.எஸ்.டியில் ஜாப் ஆர்டர்களுக்கு வரிகளை குறைக்க வேண்டும், என கோரிக்கை வைத்தோம். அதுவும் கண்டுக்கொள்ளப்படவில்லை. 

மூலப்பொருட்கள் வங்கி ஒன்று கோவையில் அமைக்கப்பட வேண்டும், என கோரிக்கை வைத்தோம் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படி தொழில்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

தொழில்முனைவோர்களின் குரல் ஒலிக்க வரும் சட்டமன்ற தேர்தலில் தொழில்முனைவோர்களே போடியிட முடிவு செய்துள்ளோம். தொழில்துறையினர் மீண்டு எழ வேறு வழியில்லை. மத்திய, மாநில அரசுகளை எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம். இவ்வாறு மணிராஜ் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...