கோவை: இன்றுமுதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் நிலையில், சலுகை பாஸ் பயன்படுத்தும் மாணவர்கள் மனம் புண்படாத வகையில் இன்முகத்துடன் பணிபுரிய வேண்டும் என அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக பல்கலைக்கழகம் கல்லூரிகளில் முதுநிலை இறுதியாண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு, கடந்த வாரம் வகுப்புகள் துவங்கின. இன்று முதல், இளநிலை இறுதியாண்டு கலை, அறிவியல், இன்ஜினியரிங், வேளாண்மை, தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக் கழக மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்குகின்றன.
சுமார், 8 மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் பஸ்களில் பயணித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையால் பஸ்களில் பழையபடி நெரிசல் ஏற்படும் என்பதால் கண்டக்டர்கள் கடிந்து கொள்ளாமல் இன்முகத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில்:- கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் பயணிகளிடம் கனிவான அணுகுமுறையும், வழிநடத்தலும் அவசியம். கண்டக்டர்கள் சிலர் மாணவர்களை கடிந்து கொள்வதாகவும், டிரைவர்கள் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை என புகார்களும் வருவதுண்டு. இனி, இவற்றை தவிர்த்து பஸ் பாஸ் சரிபார்த்து அவர்கள் மனம் புண்படாத வகையில் இன்முகத்துடன் பணிபுரிய டிரைவர் கண்டக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், நோயை கட்டுப்படுத்த உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பயணிகள் அனைவரும் கடைபிடிப்பது அவசியம், இவ்வாறு அவர் கூறினார்.