திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 54 வது வார்டுு, கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து மழை நேரங்களில் மழை நீர் தேங்கி நின்று குளம் போல காட்சி அளிக்கின்றது. இதனால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதை பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைை, என அப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இருப்பினும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இன்று அப்பகுதியில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டும், ஆண்கள் கையில் காயம் அடைந்தது போல கட்டுகள் அணிந்தும், நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.