கோவை: மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளான் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என அறிவிக்கபட்டது. இதனையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வேளான் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வலுகட்டாயமாக மறியலில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.ஐ சார்பில் மாவட்ட செயலாளர், சுந்தரம், மாநில பொது செயல்லாளர், ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர்கள் சிவசாமி, தேவராஜ், சி.பி.ஐ(எம்) சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாநில குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.