கோவை உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் வடமாநில மக்களை சந்தித்து ஆதரவு கோரினார், எம் பி கனிமொழி

கோவை: திமுக மக்களவை உறுப்பினரும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கோவை: திமுக மக்களவை உறுப்பினரும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணம் மேற்கொண்டு உள்ளார்.



கோவையில் பல்வேறு பகுதிகளில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும், திமுகவின் மகளிர் அணி செயலாளர் எம்.பி கனிமொழி, இன்று காலை தேவாங்க பள்ளியில் செயல்பட்டு வரும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு கேட்டார். இதன் பின்னர், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை சென்ற அவர் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.



அப்போது, அங்கிருந்து விவசாயிகள் உழவர் சந்தைக்கு விளை பொருட்களை எடுத்து வருவதில் போக்குவரத்தில் சிரமம் இருப்பதாகவும், அதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

அவர்களின் குறைகளை கேட்டறிந்த, எம் பி கனிமொழி, திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். பிறகு, அங்கிருந்து சொக்கம்புதூர் சென்றவர், அப்பகுதியில் உள்ள வட மாநில மக்களிடையே ஆதரவு கோரினார். இதன் பின்னர், கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் இன்று மாலை சிறு குறு தொழில் முனைவோருடனான சந்திப்பு, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் மகளிர் அணியுடனான கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...