திருப்பூர்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் த.மு.மு.க சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷா, மோடி உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்த 27 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2019ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும் திருப்பூர் மாநகராட்சி எதிரே த.மு.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது அமித்ஷா, மோடி ஆகியோர் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் த.மு.மு.க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.