பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில், இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பொள்ளாச்சி: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பொள்ளாச்சி: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு எஸ் டி பி ஐ (SDPI) கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டும், வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் இருந்ததிற்கான எந்த ஆதாரத்தையும் சுட்டிக்காட்டாமல், ஆவணத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் இந்துத்துவா அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது, எனவே பாபர் மசூதி இடத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில், த.மு.மு.க மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...