பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி மற்றும் நாட்டுக்கல்பாளையம் ஊராட்சிகளில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர், மறைந்த ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் நிவர் புயலால் கடலூர் நாகை, செங்கல்பட்டு, பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மாடுகள், வெள்ளாடுகள் உள்ளிட்ட 3,906 கால்நடைகளும், அதேபோல் 30 ஆயிரத்து 501 கோழிகளும் உயிரிந்துள்ளது, என்றார்.
"இதன், உரிமையாளர்களுக்கு 90 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 563 சிறப்பு கால்நடை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மழைப்பொழிவு மாவட்டங்களில் 39 ஆயிரத்து 289 கால்நடைகளுக்கு வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும், 47 ஆயிரத்து 525 கிலோ சத்துக் கலவைகள் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது", என்றார்.
தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் உத்தரவு படி புயல் காரணமாக கால்நடைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் உயிழிழந்த அனைத்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று, தெரிவித்தார்.