குடியிருப்பு பகுதிகளில்‌ சூழ்ந்துள்ள நீரை அகற்றி வெட்‌ மிக்ஸ்‌ சாலை போட அலுவலா்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி உத்தரவு..!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ நீர்‌ சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ நீர்‌ சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வுக்கு பின், குடியிருப்பு பகுதிகளில்‌ சூழ்ந்துள்ள நீரை உடனடியாக அகற்றி வெட்‌ மிக்ஸ்‌ சாலை போட அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தார்‌ பகுதிகளில்‌ கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில்,‌ அப்பகுதியில்‌ உள்ள செங்குளம்‌ நிரம்பியது. இதனால்,‌ அப்பகுதியில்‌ உள்ள கிணறுகள்‌ நிரம்பி வயல்வெளிகளில் மற்றும் குடியிருப்புகளில்‌ நீர் சூழ்ந்தது.



குறிப்பாக, வசந்தம்‌ கார்டன்‌, கிளாசிக்‌ கார்டன்‌ ஆகிய நீர் சூழ்ந்த பகுதிகளில்‌ ராட்சத மோட்டார்‌ மூலமாக நீரை வெளியேற்றுவதை பார்வையிட்ட அமைச்சர், நீரை வெளியேற்றிய பின்னர், உடனடியாக வெட்மிக்ஸ்‌ சாலைகள்‌ போட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



அதனைத்‌ தொடாந்து வார்டு எண்‌.88 கங்கா நகர்‌ பகுதிகளில்‌ நீர் சூழ்ந்த பகுதிகளில்‌ நீரை வெளியேற்றி, வெட்மிக்ஸ்‌ சாலைகள்‌ போடப்பட்டுவரும்‌ பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது, கங்கா நகர்‌ பகுதியில்‌ உடனடியாக நீரை வெளியேற்றி வெட்‌ மிக்ஸ்‌ சாலைகள்‌ போட்டு தந்தமைக்கு அப்பகுதி மக்கள்‌ அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌, பொறியாளர் லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌,.டி.ஆர்‌.ரவி, உதவிப்‌ பொறியாளா்கள்‌, தெற்கு மண்டல சுகாதார அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...