கோவை: கொரோனா தொற்றை தவிர்க்கும் விதமாக ரயில் நிலையம் செல்வதை தவிர்த்து இ-டிக்கெட் பெறுவதில் முக்கியத்துவம் அளித்து சேலம் கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிவர் புயல் காரணமாக சமீபத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெறக் கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது கொரோனா நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சூழலில் பயணிகள் ரயில் நிலையத்தில் கூடுவதை தவிர்த்து ஐ.ஆர்.சி.டி.சியின் ஆன்லைன் முன்பதிவுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு சேலம் கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி கூறியதாவது:-
ஐ.ஆர்.சி. டி.சி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ரயில்களில் டிக்கெட் பணம் வங்கி கணக்கில் திரும்பவும் சேர்ந்துவிடும். கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் பயண தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து அறியாத சிலர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். தற்போதைய சூழலில் முடிந்தவரை டிக்கெட் முன்பதிவுக்கு ரயில் நிலையம் வருவதை தவிர்த்து ஆன்லைன் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தால் நல்லது, இவ்வாறு அவர் கூறினார்.