கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வரும் டிசம்பர் 15ம் தேதியன்று நடத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மாநகராட்சி மூலம் பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்படாமல் விடுபட்ட சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் மற்றும் பீளமேடு ஆகிய பகுதிகளிலும், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் புதிதாக சாக்கடை குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இது தொடா்பாக பொதுமக்கள் கருத்துக்களை கேட்கும் கலந்தாய்வு கூட்டம் சரவணம்பட்டி, துடியலூர் பகுதிக்கான கூட்டம் 15.12.2020 அன்று துடியலூர் S.S.கமலேஷ் கல்யாண மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.
வடவள்ளி, வீரகேரளம் பகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் K.C.கல்யாண மண்டபம், கல்வீரம் பாளையத்தில் மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் மற்றும் பீளமேடு பகுதிக்கான கருத்து கேட்கும் கலந்தாய்வு கூட்டம் 15.12.2020 அன்று மணி மஹாலில் (மணிஸ் தியேட்டா் அருகில் ESI சாலை) மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.