கோவை குனியமுத்தூர் பகுதியில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது!

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். 

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு குனியமுத்தூர் மைல்கல்லை சேர்ந்த பைசல் (31), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இரண்டு பேரும் வெளியூருக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

இந்த நிலையில், பைசல் இளம்பெண்ணை அடிக்கடி உல்லாசமாக இருக்க அழைத்து தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் பேசுவதையும் வெளியே செல்வதையும் தவிர்த்து வந்தார். வெளியே வர மறுத்ததால் பைசலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, அவர் இளம் பெண்ணை சந்தித்து ஜாலியாக இருக்க வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மேலும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். 

இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பைசலை இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...