மாற்றுக் கட்சிகளில் இருந்து அதிமுகவுக்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: மாற்றுக் கட்சிகளில் இருந்து அதிமுகவுக்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை: மாற்றுக் கட்சிகளில் இருந்து அதிமுகவுக்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



ஹூசூர் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் இணைந்தனர். கோவை அதிமுக மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் இணையும் விழா நடைபெற்றது.



இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சால்வை அணிவித்தார்.



பின்னர் அவர் பேசுகையில், அதிமுகவில் தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து களப்பணியாற்றி வருவதாக கூறினார். மேலும் மாற்றுக் கட்சிகளில் இருந்து அதிமுகவுக்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், ஆறுகுட்டி, கந்தசாமி, அம்மன் அர்ஜுனன், சின்ராஜ் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அவரது திருவுருவப் படத்திற்கு முன்பு கையில் தீபம் ஏந்தியவாறு வரும் தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்கு களப்பணி ஆற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...