கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 49,430 ஆக உயர்வு!

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49,430 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் கோவையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 169 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,881 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 932 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இன்று(05-12-2020) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகளின் பகுதி வாரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...