கோவை விமான நிலையத்தில் சூட்கேசில் மறைத்து கடத்த முயன்ற 5.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது!

கோவை: கோவை விமான நிலையத்தில் சூட்கேசில் மறைத்து கடத்த முயன்ற 5.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் சூட்கேசில் மறைத்து கடத்த முயன்ற 5.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வளைகுடா நாடான சாஸ்தாவிற்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 4.10 மணிக்கு ஏர் அரேபியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. சார்ஜாவுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் விமான நிலையத்திற்கு வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களது உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அப்போது, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாகரத்தினம் (44), என்பவரது நடவடிக்கை மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சூட்கேசை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஸ்கேனர் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில் நாகரத்தினம் சூட்கேஸின் அடிப்பகுதியில் மெத் எனப்படும் போதைப் பொருட்களை மறைத்து வைத்து விமானத்தில் சார்ஜாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சூட்கேசில் இருந்த இரண்டு பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ போதைப் பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். சர்வதேச அளவில் இதன் மதிப்பு ரூபாய் 5.5 கோடி என்பது தெரியவந்தது.

பின்னர் நாகரத்தினத்தைப் பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். அப்போது நாகரத்தினம் பாதுகாப்பு படையினரிடம் கூறியதாவது:-

நான் சார்ஜாவிற்கு செல்வதற்காக வந்தேன். அப்போது விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த நண்பர் ஒருவர் என்னிடம் இந்தப் பெட்டியை கொடுத்தார். அவர் கொடுக்கும் போது இது காலி பெட்டி என கூறினார். மேலும் நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் பின்பு வருகிறேன் எனக்கூறினார். பெட்டியில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது எனக் கூறினார்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நாகரத்தினத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் 5.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...