கோவை வெள்ளலூர் பகுதியில் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல்‌ பாதுகாக்கப்படும் - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை: கோவை வெள்ளலூரில்‌ இவ்வளவு நாட்களாக கொண்டுவந்த குப்பைகளை அப்புறப்படுத்தும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதியில்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப தெரிவித்தார்.



கோவை: கோவை வெள்ளலூரில்‌ இவ்வளவு நாட்களாக கொண்டுவந்த குப்பைகளை அப்புறப்படுத்தும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதியில்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியின்‌ நகராட்சி கலையரங்கத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்து தூய்மை பாரத திட்ட தூதுவர்கள்‌, தூய்மை பாரத பரப்புரையாளர்களுடனான கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது,

கோவை மாநகராட்சியில்‌ திடக்கழிவு மேலாண்மை முன்னேற்றத்திற்காக மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என வார்டு வாரியாக மக்கள்‌ தரம்‌ பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌. சாக்கடை மற்றும்‌ தெரு ஓரங்களில்‌ குப்பைகள்‌ கொட்டாமல்‌ இருக்க வேண்டும்‌. தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களுக்கு மாற்றாக மாற்றுப்‌ பொருட்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம்‌ ஏற்படுத்திட வேண்டும்‌ என்றார்.

அதேபோல, நுண்ணுயிர்‌ கூடம்‌ செயல்பாட்டின்‌ முன்னேற்றத்திற்கு மக்கும்‌ கழிவுகளையே கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்‌. வீட்டிலேயே மக்கும்‌ குப்பைகளை வைத்து உரம்‌ தயாரித்து வீட்டுத்‌ தோட்டம்‌ அமைத்து மாநகராட்சிக்கு வரும்‌ குப்பைகளின்‌ அளவை குறைக்க வேண்டும்‌. தோட்டக்கழிவுகளை அறிவியல்‌ முறைப்படி அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. மக்காத குப்பைகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம்‌ வழங்கிட வேண்டும்‌ என்று கூறினார்.

மேலும், வெள்ளலூரில்‌ வரும்‌ குப்பையின்‌ அளவை குறைக்க வேண்டும்‌. வெள்ளலூரில்‌ இவ்வளவு நாட்களாக கொண்டுவந்த குப்பைகளை அப்புறப்படுத்தும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்‌ அப்பகுதியில்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாக்கப்படும். வணிக நிறுவனங்களிலிருந்து வரும்‌ மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தனியாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தூய்மை பாரத தூதுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கிய ஆணையாளர்‌ அவர்கள்‌ தூய்மை பாரத தூதுவர்களிடம்‌ குப்பை இல்லாத வார்டு குப்பைத்‌ தொட்டி இல்லாத வார்டு உருவாக்குவது குறித்து அதற்குண்டான நடவடிக்கைகள்‌ தொடர்பான ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி அவர்கள்‌, மாநகராட்சிப் பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மாநகர நல அலுவலா்‌ மரு.ராஜா, செயற்பொறியாளர்‌ (ஸ்மாட்‌ சிட்டி) சரவணக்குமார்‌, அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பாரதியார்‌ பல்கலைக்கழக பேராசிரியர்‌ மரு.ரூபா குணசீலன்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள்‌, ராக்ரவீந்திரன்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...