கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் டிரோன் கேமரா மூலம் தேங்கியுள்ள குப்பைகளை அளவிடும் பணி துவக்கம்..!

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் திட்டம் தொடர்பாக வெள்ளலூர் குப்பைகிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை டிரோன் கேமரா மூலம் அளவிடும் பணி நேற்று முதல் துவங்கி உள்ளது.

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் திட்டம் தொடர்பாக வெள்ளலூர் குப்பைகிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை டிரோன் கேமரா மூலம் அளவிடும் பணி நேற்று முதல் துவங்கி உள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. 

இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு தரம்பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த குப்பைகளால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில், அங்குள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது. 

இதற்காக, வெள்ளலூர் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள் அளவு எவ்வளவு, என்ன மாதிரியான குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளன என்பது குறித்து அளவீடு செய்ய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இவர்கள், டிரோன் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுன் இங்கு தேங்கியுள்ள குப்பைகளை அளவீடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெள்ளலூர் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை அளவிட நவீன டிரோன் கேமரா பெரிதும் உதவும். இந்த டிரோன் கேமரா மூலம், குப்பையின் அளவை சர்வே செய்த பின்னர் பயோ மைனிங் மூலம் அதனை அழிக்கும் பணி துவங்கும். இதன் மூலம் தேங்கியுள்ள குப்பைகளின் அளவை குறைக்க முடியும்,’’ என்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...