டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்...!

பொள்ளாச்சி: மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பத் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி: மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பத் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 



இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர், தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, நகர கழக பொறுப்பாளர் வரதராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆனைமலை ஒன்றிய கிழக்கு செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

 ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது திமுகவினர் வலியுறுத்தினர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...