மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம்: கோவையில் அதிமுகவினர் மௌன ஊர்வலம்..!

கோவை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவையில் அதிமுகவினர் மௌன ஊர்வலமாகச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோவை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவையில் அதிமுகவினர் மௌன ஊர்வலமாகச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 



அதிமுக முன்னாள் பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம், அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. 



அதன் ஒரு பகுதியாக கோவையில் ஓசூர் ரோட்டில் உள்ள அஇதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை வரை அக்கட்சியினர் மவுன ஊர்வலம் சென்று அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை மாநகர் மாவட்ட செயலாளர், அம்மன் அர்ஜுனன் தலைமையில் மவுன ஊர்வலமாக சென்ற சுமார் 200க்கும் மேற்பட்ட அஇதிமுக தொண்டர்கள், பின்னர் மீண்டும் ஊர்வலமாக அஇதிமுக அலுவலகம் திரும்பி வந்து,ப்அங்கு வைக்கபட்டு இருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஇதிமுக தொண்டர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...