நீலகிரி: கோவிட் 19 ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ந் தேதி முதல் மூடப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா மையங்கள் வரும் 7ந் தேதி திங்கள் கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி: கோவிட் 19 ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ந் தேதி முதல் மூடப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா மையங்கள் வரும் 7ம் தேதி திங்கள் கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
உதகமண்டலத்தில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுலா மையங்களும் திறக்கப்படும் என்றார்.
மேலும், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது குறித்து அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதி கிடைத்தவுடன் திறக்கப்படும் என்று தெரிவித்த அவர், சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டாலும் அரசின் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இ - பதிவு விதிமுறைகள் கடைபிடிப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.