கோவையில் வழக்கறிஞர் ராஜவேல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் பாராட்டு!

கோவை: கோவையில் வழக்கறிஞர் ராஜவேல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவையில் வழக்கறிஞர் ராஜவேல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் பாராட்டு தெரிவித்தார்.

கோவை வழக்கறிஞர் ராஜவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அம்மாசை என்ற அப்பாவி பெண்ணை கொலை செய்து எரித்து ராஜவேல் மனைவி பெயரில் இறப்பு சான்றிதழ் வாங்கிய வழக்கில் இருவருக்கும் கோவை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கியது.

இந்நிலையில், இவ்வழக்கில் தன்னுடைய தலைமையில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் அவர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் கமிஷனர் கூறும்பொழுது, சட்டம் படித்த தம்பதியினர் தனக்கு எல்லாம் தெரியும் என்ற நோக்கத்தில் தங்களுடைய முழு பலத்தையும் காண்பித்து பல்வேறு விதமான ஆவணங்களை மறைக்க முயற்சி செய்தனர். நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்கள் திருடு போயின. அப்படி இருந்தும் எந்த சூழ்நிலையிலும் சளைக்காமல் நேர்மையுடனும் நீதியுடனும் அப்பாவிப் பெண்ணுக்கு நீதியும் நியாயமும் நிலைக்கச் செய்த காவல்துறை அதிகாரிகளே முழுமனதோடு பாராட்டுகிறேன். இவர்கள் தொடர்ந்து இதேபோல் காவல் துறையில் நீதியுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு பல்வேறு விதமான சாதனைகள் புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...