கோவையில் அதிர்ச்சி..! மனைவி தாய் வீட்டுக்கு கோபித்துச் சென்றதால் தற்கொலை செய்து கொண்ட கணவன்மார்கள்!

கோவை: கோவையில் மனைவி தாய் வீட்டுக்கு கோபித்து சென்றதால் கணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மனைவி தாய் வீட்டுக்கு கோபித்துச் சென்றதால் கணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (29). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அம்பிகா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.

பின்னர் ஆனந்தன் அம்பிகாவின் வீட்டிற்குச் சென்று அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால், அம்பிகா அவருடன் வர மறுத்துவிட்டார். இதனால் ஆனந்தன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு செய்து 174வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சுதாகர் (33). இவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் சுதாகர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...