மூலப்பொருள்‌ ஏற்றுமதியை தடை செய்து இந்திய உற்பத்தி பொருள்களின்‌ ஏற்றுமதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்‌ - சீமா தலைவர் கோரிக்கை

கோவை: இந்தியாவில்‌ இருந்து மூலப்பொருள்‌ ஏற்றுமதியை தடை செய்து இந்திய உற்பத்தி பொருள்களின்‌ ஏற்றுமதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்‌ என்று தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) தலைவர் கே வி கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: இந்தியாவில்‌ இருந்து மூலப்பொருள்‌ ஏற்றுமதியை தடை செய்து இந்திய உற்பத்தி பொருள்களின்‌ ஏற்றுமதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்‌ என்று தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) தலைவர் கே வி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சர்வதேச பொருளாதாரத்தில்‌ ஏற்பட்ட மாற்றத்தினால்‌, உலகநாடுகள்‌ தங்களின்‌ பொருட்களின்‌ தேவைகளுக்கு சீனாவை தவிர்த்து இந்தியாவை நாடும்‌ சூழ்நிலை ஏற்றுமதி வணிகத்தில்‌ ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்‌ முதல்‌ அக்டோபர்‌ 2020 வரை இந்திய பம்புசெட்‌ வர்த்தகம்‌ சுமார்‌ 10% குறைவாகவே இருந்துள்ளது. பம்புசெட்‌ ஏற்றுமதிக்கு சர்வதேச வியாபார விசாரணைகள்‌ தற்பொழுது அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில்‌ மூலப்‌ பொருட்களின்‌ விலை கடந்த மார்ச்‌ மாதத்தை ஒப்பிடும்‌ பொழுது காப்பர்‌ (Copper) ரூபாய்‌ 450 முதல்‌ ரூபாய்‌ 650 வரையிலும் ஸ்டெயின்லெஸ்‌ ஸ்டீல்‌ ரூபாய்‌ 68 முதல்‌ ரூபாய்‌ 80 வரையிலும் எலக்ட்ரிகல்‌ ஸ்டீல்‌ ரூபாய்‌ 52 முதல்‌ ரூபாய்‌ 63 வரை கிலோவிற்கு உயர்ந்துள்ளது

மேலும்‌ தேனிரும்பு ரூபாய்‌ 30,000 முதல்‌ ரூபாய்‌ 36,500 வரை ஒரு டன்னுக்கு உயர்ந்துள்ளது. மேலும்‌ அனைத்து பொருட்களும்‌, பேக்கிங்‌ மெட்டீரியல்‌ உள்பட 10 சதவீதம்‌ விலை உயர்ந்துள்ளது. இதனால்‌ பம்பு செட்டுகளின்‌ உற்பத்தி செலவு சுமார்‌ 15 சதவீதம்‌ உயர்ந்துள்ளது . இதனால்‌ பம்பு செட்டு உற்பத்தியாளர்கள்‌ பம்பு செட்டுகளின்‌ விலையை உயர்த்தும்‌ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்‌. இந்த விலை ஏற்றம்‌ ஏற்றுமதி வணிகத்தில்‌ மிகப்பெரிய பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும்‌.

மூலப்பொருட்களின்‌ விலையேற்றத்தினை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்‌ இல்லை எனில்‌ இந்திய பம்புசெட்டு நிறுவனங்கள்‌ தற்பொழுது உலகளாவிய பங்களிப்பில்‌ சுமார்‌ 2 சதவீதம்‌ மட்டுமே கொண்டுள்ளது இதையும்‌ இழக்க வேண்டிய நிலை ஏற்படும்‌. மேலும்‌ இழந்த சர்வதேசச் சந்தையை கைப்பற்ற இரண்டு வருடங்கள்‌ வரை ஆகலாம்‌.

ஏற்றுமதி வணிகம்‌ மட்டுமல்லாமல்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மூலப்பொருட்களின்‌ விலையேற்றத்‌தினால்‌ மிகப்பெரிய நெருக்கடியினை சந்தித்து வருகின்றன.

மூலப்‌பொருள்‌ தயாரிப்பாளர்கள்‌ அல்லது விற்பனையாளர்கள்‌ ஸ்டீல்‌ மற்றும்‌ ஐயன்‌ ஓர்‌ (Iron Ore) போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்வதினால்‌ இந்த விலையேற்றம்‌ ஏற்படுவதாக கூறுகின்றனர்‌. மேலும்‌ எலக்ட்ரிகல்‌ ஸ்டீல்‌ இறக்குமதிக்கு தடை போன்றவை இந்தியாவில்‌ மூலப்பொருட்களின்‌ விலையேற்றத்திற்கு காரணமாகின்றது. SAIL தங்களது விற்பனையை வியாபாரிகளுக்கு விற்பதில்‌ முன்னுரிமை கொண்டுள்ளனர்‌. உற்பத்தியாளர்களுக்கு SAIL ஸ்டீல்‌ பொருட்கள்‌ தேவையேற்படும்‌ பொழுது கிடைப்பதில்லை.

மத்திய அரசு சீமாவின்‌ கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின்‌ விலையேற்றத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து சிறு, குறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களை காக்க வேண்டும்‌. அதோடு இந்தியாவில்‌ இருந்து மூலப்பொருள்‌ ஏற்றுமதியை தடை செய்து இந்திய உற்பத்தி பொருள்களின்‌ ஏற்றுமதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌கொள்கின்றோம்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...