நடிகர் ரஜினியை யார் இயக்கினாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது - கனிமொழி எம்பி

நீலகிரி: நடிகர் ரஜினியை யார் இயக்கினாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று நீலகிரியில் திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.


நீலகிரி: நடிகர் ரஜினியை யார் இயக்கினாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று நீலகிரியில் திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

தி மு க மகளிரணி தலைவியும் எம்பியுமான கனிமொழி நேற்று ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது,

செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திமுக ஆட்சிக்கு வருவதில் ஆர்வமாக உள்ளனர். இதன் மூலம் திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை, விவசாயிகள், குடும்ப பெண்கள், தேயிலை விவசாயிகள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்

அரசிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அதை சீர் செய்யவில்லை. பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

திமுக, அதிமுகவைப் பற்றி பேசினால் தான் யாரும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும். அதனால் ரஜினி பேசியுள்ளார். அவர் வருவதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. அதனால் அவரை விமர்சிப்பது சரியில்லை என்றார்.

மேலும், ரஜினியை யார் இயக்கினாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பது தவறு. இந்தி படித்த மக்கள் ஏன் வேலைக்காக தமிழகம் வருகிறார்கள். மொழி கற்பதில் தவறில்லை. தரமான கல்வியை கற்றாலே போதும் உலகம் முழுவதும் சென்று வேலை வாய்ப்பை பெற முடியும். ஊட்டியில் ஹெலிக்காப்டர் சுற்றுலா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...