பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதி!

கோவை: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு வாலிபர்களின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நிகழ்ந்த இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் 5 பேரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக அனுமதி கோரி சி.பி.ஐ தரப்பில் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பொறுப்பு ராதிகா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக ஐந்து பேரின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, குரல் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக 5 பேரையும் சென்னைக்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கு உள்ள தடயவியல் ஆய்வு மையத்தில் குரல் மாதிரிகளை சேகரித்து சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆடியோ வீடியோ பதிவுகள் குரல் ஒத்துப் போகிறதா? என்று விசாரிக்க உள்ளோம். இதன் மூலம் வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று சிபிஐ தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...