கோவை: கோவை பொள்ளாச்சி அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இரண்டு குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் அட்டாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (27), இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ரம்யா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவருடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. ரம்யாவை திருமணம் செய்துகொள்ள தர்மராஜ் விருப்பம் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதித்தார்.
இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யாவை திருமணம் செய்துகொண்ட தர்மராஜ் ரம்யாவின் இரண்டு குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் நீலகிரியில் இருந்து இடம்பெயர்ந்து கோவைக்கு வந்தனர்.
பொள்ளாச்சி அருகே மெட்டுவாவி என்ற இடத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து தர்மராஜீம், ரம்யாவும் வேலை பார்த்து வந்தனர். இங்கு வந்த ரம்யா திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். நேற்றிரவு அவர் திடீரென இறந்தார். இதனால் தர்மராஜா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் தான் வேலை பார்த்த தோட்ட உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
தோட்ட உரிமையாளர் தர்மராஜ் சமாதானப்படுத்தி இன்னும் சற்று நேரத்தில் நான் அங்கு வருகிறேன் எனக்கூறினார். ஆனால், ரம்யா இறந்ததால் மனமுடைந்த தர்மராஜூம் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தோட்ட உரிமையாளர் அங்கு வந்து பார்த்த போது ரம்யா இறந்து கிடந்த இடத்திற்கு அருகிலேயே தர்மராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுபற்றி அவர் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கணவன், மனைவி இரண்டு பேர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, கணவன் மனைவி மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரது இரண்டு குழந்தைகளும் தவித்து வருகின்றனர். மேலும், நீலகிரியில் வசிக்கும் ரம்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.