அரசு விழாக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைப்பதில்லை - கோவை மாவட்ட ஆட்சியருக்கு சி.பி.எம் கண்டனம்!

கோவை: அரசு விழாக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.


கோவை: அரசு விழாக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கோவை நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் உள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அரசு விழாக்களுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் அரசு விழாவிற்கான அழைப்பிதழ்களே அடிப்பதில்லை.

அழைப்பிதழ்கள் அரசு சார்பில் அச்சடிக்கப்பட்டால், அதில் பி.ஆர்.நடராஜன் எம்பியின் பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே அழைப்பிதழ் அடிக்கப்படுவதில்லையோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. ஏற்கனவே சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை வரவழைத்து அவிநாசி சாலை மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில், மீண்டும் நேற்றைய தினம் உள்ளாட்சித்துறை அமைச்சரை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு அடிக்கல் விழா அரசு சார்பில் நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்களுக்கு அழைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அதிமுகவின் கூட்டணி கட்சியாக இருக்கிற காரணத்திற்காக பாஜகவின் முன்னாள் எம்பி அழைக்கப்படுவதும், இந்நிகழ்வில் அவர் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்பது இது அரசு விழாவா அல்லது இவர்களின் கூட்டணி கட்சிகளின் அணிவகுப்பு விழாவா என்கிற ஐயம் எழுகிறது.

சமீப காலமாக அரசு விழாக்கள் அனைத்தும் அதிமுக விழாவைப்போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமே முன்னின்று செய்கிறதோ என்கிற ஐயம் எழுகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியை அரசு விழாக்களுக்கு அழைக்காமல் இருப்பது என்பது கோவை மாவட்ட மக்களின் எண்ணத்திற்கு விரோதமானது என்பதை கோவை மாவட்ட ஆட்சியருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதுபோன்ற செயல்கள் இனிமேலும் நடைபெறாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...