கோவை: சேலம் செல்வதற்காக கோவை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் குவிந்ததால் விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை: சேலம் செல்வதற்காக கோவை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் குவிந்ததால் விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேளாண்மை சட்ட திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை, தொண்டர்கள் உற்சாக மிகுதியால் முண்டியடித்துச் சென்று அவரை காணவும், புகைப்படம் எடுக்கவும் முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், கொரோனா தொற்று காலத்தில் தனிமனித இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் முந்தியடுத்தி சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் கட்சியனரை பார்த்து கையசைத்தபடியே காரில் ஏறியவர் சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டுச் சென்றார்.