கோவை:: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் ஆவாரம்பாளையம் பகுதியில் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் இன்று, டிசம்பர் 4, 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி வடக்கு மண்டலம் ஆவாரம்பாளையம் அரசமரம் 3வது தெரு, ஸ்ரீனிவாசா நகா், காமராஜர் நகா், காவேரி வீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், அப்பகுதிகளில் குடிநீர் குழாய் பதிபதற்காக தோண்டப்பட்ட இடங்களில், குழாய்கள் பதித்த பிறகு தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சமன் செய்து சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்பு, அப்பகுதியில் கழிவு நீர் செல்லும் வடிகால் கால்வாய்களில் பார்வையிட்டு, கழிவு நீர் செல்வதற்கு ஏதுவாக வாய்க்கால்களை தூர்வாரி தூய்மை செய்து, கால்வாய்களில் அவ்வபோது மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும் என்று ஆய்வின் போது அறிவுறுத்தினார்.

கால்வாய்களில் தேங்கியுள்ள நீரை, நீர் உறுஞ்சும் மோட்டார் பொருத்திய வாகனங்கள் மூலம் உடனடியாக வெளியேற்றிட வேண்டும் என அலுவலாகளிடம் தெரிவித்த ஆணையர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக் கூடாது, என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்களிடம் குடிநீர் சீராக கிடைக்கப் பெறுகிறதா? எனக் கேட்டறிந்த பின்பு குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டாமல், சேகரித்த குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி, தங்கள் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆணையர், அவர்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல உதவி ஆணையார் செந்தில்குமார் ரத்தினம், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதாரஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.